Thursday, November 4, 2010

காலமும் இடமும் - உயிர்மை உயிரோசையில் வெளியான கவிதை

காலமும் இடமும்
குமரி எஸ். நீலகண்டன்

இடங்கள் இடங்களாகவே
இருக்கின்றன. அதில்
இருப்பவர்களும்
அடையாளங்களும்
மாறிக் கொண்டிருக்கின்றன.
இடம் தன் அடையாளத்தை
இழந்த போதும்
இருந்தவர்களிடமெல்லாம்
எப்போதும்
பேசிக்கொண்டே இருக்கிறது
இருந்த அடையாளத்துடன்.
ஒவ்வொரு இடத்திலும்
பலர் வருவார்கள்..
இருப்பார்கள்...
போவார்கள்
ஆனால் இருந்த
காலத்தின் இடம்
இருந்தவர்களுக்கானது.

4 comments:

  1. உங்கள் எழுத்துகளை திண்ணை தளத்தில் பார்த்திருக்கிறேன். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. நண்பரின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  3. ARUMAI, KANNA UN KAVITHAIKAL ELLAM SUPER. ANBUDAN ANNAN

    ReplyDelete
  4. அண்ணா உங்கள் வாழ்த்துக்களில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

    ReplyDelete